கங்கைத்தாயை ஏமாற்றமடைய செய்துவிட்டார் பிரதமர் மோடி. லாலு பிரசாத் யாதவ் டுவிட்டரில் நக்கல்

lalu prasad yadav got jaminபிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசிக்கு அவர் பயணம் செய்யவிருந்த இரண்டு பயணத்திட்டமும், கனமழை காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறித்து கருத்து கூறிய முன்னாள் பீகார் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவரான லல்லு பிரசாத் யாதவ் கூறும்போது, “கங்கைத்தாய் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார். இந்த ஏமாற்றத்தால் மிகுந்த வருத்தமடைந்துள்ள அவர், தன் கோபத்தை வெளிப்படுத்துவார்.” என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு கடந்த மாதம் 28ஆம்ந் தேதி செல்வதாக இருந்தது. ஆனால் பலத்த மழை காரணமாக அன்றைய பயணம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக நேற்று, பிரதமர் மோடி வாரணாசி செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டது. வாரணாசியில் புதிய மின் திட்டத்தை துவக்கி வைத்து, பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுவதற்கு மோடி திட்டமிட்டிருந்தார். அங்குள்ள, டி.எல்.டபிள்யூ மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந் நிலையில், நேற்றும் வாரணாசியில் பலத்த மழை பெய்து வருவதால் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் தனது ட்விட்டரில், “ கங்கைத்தாய் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார். இந்த ஏமாற்றத்தால் மிகுந்த வருத்தமடைந்துள்ள அவர், தன் கோபத்தை வெளிப்படுத்துவார்.” என்று நக்கலாக ட்வீட் செய்துள்ளார். மேலும் ஊழலும் சாதிகளும் நிறைந்த பா.ஜ.க தற்போது மோசமான அரசியலைக் கையிலெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply