மத்தியில் ஒரே அமைச்சர். ஒருவரிடம் மட்டுமே அதிகாரம். மோடிக்கு ராகுல்காந்தி கண்டனம்

மத்தியில் ஒரே அமைச்சர். ஒருவரிடம் மட்டுமே அதிகாரம். மோடிக்கு ராகுல்காந்தி கண்டனம்

rahul gandhiசமீபத்தில் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு உற்சாகத்துடன் திரும்பி வந்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, அதன்பின்னர் புயல் வேகத்தில் பாஜக அரசு மீது தாக்குதல் தொடுத்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் மக்களின் வரவேற்பு மிக அதிகமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றது. முன்பை விட தற்போது ராகுல்காந்தி மிக உணர்ச்சிகரமாக பேசி, மக்களை கவர்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல், ” நாடாளுமன்றத்தில் நில எடுப்பு மசோதாவை நிறைவேற்றவிட மாட்டோம். விவசாயிகளிடமிருந்து ஒரு அங்குல நிலத்தைக் கூட அரசாங்கம் எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம். இன்னும் 6 மாதங்களில்  மோடியின் 56 அங்குல மார்பு 5.6 அங்குலமாக சுருங்கிவிடும்.

இந்த நாட்டின் விவசாயிகளும், காங்கிரஸ் கட்சியும் மற்றும் இந்த நாட்டு மக்களும் 56 அங்குல மார்பை 5.6 அங்குல மார்பாக நிச்சயம் குறைத்துவிடுவார்கள். பிரதமரான பின்னர் மோடி விவசாயிகளை மறந்துவிட்டார். விவசாயிகளுக்கு அவர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் எல்லாமே வெத்துவேட்டாக ஆகிவிட்டது.

நான் இங்கே பேசுவது இந்த நாட்டின் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடுதான். பிரதமர் மோடி அரசின் அதிகாரங்களையெல்லாம் தனது கையிலேயே குவித்து வைத்துள்ளார். மத்திய அரசில் ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே உள்ளார்” என்று மேலும் கூறினார்.

Leave a Reply