கழுத்தை அறுத்து கொலை செய்யும் 10 வயது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி. அதிர்ச்சி புகைப்படங்கள்

[carousel ids=”68370,68371,68372,68373,68374″]

சிரியா மற்றும் ஈராக் நாடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் சமீப காலமாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கும் தீவிரவாத பயிற்சி கொடுத்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் 10 வயது சிறுவன் ஒருவன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட்ட ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்யும் கொடூர காட்சியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த மே மாதம் தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட ஒருவரை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்ற 10 வயது சிறுவன், கூர்மையான கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்யும் காட்சியின் வீடியோ உலகையே அதிரச் செய்துள்ளது. கையில் புத்தகம் மற்றும் பேனாவை எடுக்க வேண்டிய ஒரு சிறுவன், கத்தியை எடுத்து கொலை செய்யும் இந்த காட்சிக்கு உலகின் முன்னணி நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். பிஞ்சு குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சை வளர்க்கும் இதுபோன்ற செயல்களை உடனே நிறுத்த வேண்டும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களிலும் முன்னணி இணையதளங்களிலும் மிக வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோவை பார்க்கும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply