எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: காலியிடங்கள் எவ்வளவு?

download (2)

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் இட ஒதுக்கீட்டு வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. இவை சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org–இல் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் வரும் 22-ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், அரசு பி.டி.எஸ். காலியிடங்கள் ஆகியவை

சமுதாயப் பிரிவினர் வாரியாக அட்டவணையாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள 17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 927 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களின் அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள 6 காலியிடங்கள் (வகுப்புவாரியாக): அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்ட்ட வகுப்பினருக்கு 3 இடங்கள், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினருக்கு 1 இடம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1 இடம், தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் வகுப்பினருக்கு 1 இடம் என மொத்தம் 6 காலியிடங்கள் உள்ளன. கல்லூரிகள், காலியிடங்கள் குறித்த விவரம்: 1. திருநெல்வேலி-1 (எஸ்சிஏ); 2. கோவை-1 (பி.சி.); 3. தூத்துக்குடி-1 (பிசிஎம்); 4. வேலூர்-1 (பி.சி.); 5. சிவகங்கை-1 (எம்.பி.சி.); 6. திருவண்ணாமலை-1 (பி.சி.).

சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ்.-109 காலியிடங்கள் (வகுப்புவாரியாக): சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 51, பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினருக்கு 3, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 26, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 24, தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் வகுப்பினருக்கு 3, பழங்குடி வகுப்பினருக்கு 2 என மொத்தம் 109 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. கல்லூரிகள், காலியிடங்கள் குறித்த விவரம்:

1. தாகூர், சென்னை-46 (பி.சி.-19; பி.சி.(எம்)-1; எம்.பி.சி.-13; எஸ்.சி.-10; எஸ்.சி.(ஏ)-2; எஸ்.டி.-1;); 2. ஐஆர்டி பெருந்துறை-1 (பி.சி.); 3. பி.எஸ்.ஜி., கோவை-3; (பி.சி.-2; பி.சி.(எம்)-1); 4. ஸ்ரீ மூகாம்பிகை, கன்னியாகுமரி-10 (பி.சி.-4; எம்.பி.சி.-4; எஸ்.சி.-2); 5. கற்பகவிநாயகா, மதுராந்தகம்-4 (பி.சி.(எம்)-1; எம்.பி.சி.-1; எஸ்.சி.-2;); 6. தனலட்சுமி சீனிவாசன், பெரம்பலூர்-16 (பி.சி.-11; எம்.பி.சி.-2; எஸ்.சி.-3); 7. கற்பகம், கோவை-13 (பி.சி.-5; எம்.பி.சி.-4; எஸ்.சி.-3; எஸ்.டி.-1;); 8. வேலம்மாள், மதுரை-16 (பி.சி.-9; எம்.பி.சி.-2; எஸ்.சி.-4; எஸ்.சி. (ஏ)-1.

அரசு பி.டி.எஸ். இடங்கள்: சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 20 பி.டி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. விவரம்:- ஓ.சி.-1; பி.சி.-10; எம்.பி.சி.-7; எஸ்.சி.-1; எஸ்.டி.-1.

சுயநிதி அரசு பி.டி.எஸ்.: தமிழகத்தில் 17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 927 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க முதன்முறையாக வரும் 22-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். 927 இடங்கள் (வகுப்புவாரியாக) விவரம்:- ஓ.சி.-288; பி.சி.-246; பி.சி.(எம்)-32; எம்.பி.சி.-185; எஸ்.சி.-140; எஸ்.சி.ஏ.-27; எஸ்.டி.-9.

Leave a Reply