கழுகுமலை வெட்டுவான் கோயில் மாதிரி மர சிற்பம்: மகாலில் பார்க்கலாம்

LRG_20150720110103026285

மதுரை திருமலை நாயக்கர் மகாலில் தென்னகத்தின் எல்லோரா என்றழைக்கப்படும் கழுகுமலை வெட்டுவான் கோயில் கல்வெட்டின் மாதிரி  மர சிற்பம் காட்சிக்கு வைக்கப்படுகிறது. மாமல்லபுரத்தில் சிற்பக்கலை  வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த மர சிற்பம் கண்ணாடி  கூண்டிற்குள் வைக்கப்பட்ட பின் பொதுமக்களின் பார்வைக்காக  வைக்கப்படும். தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவில்பட்டி அரு கேயுள்ள கழுகுமலை வெட்டுவான் கோயில் எல்லோரா கைலாசநாதர் கோயில் போன்றது.  பெரிய மலைப்பாறையில் 7.5 மீ., ஆழத்திற்கு சதுரமாக  வெட்டி எடுத்து நடுப்பகுதியை கோயிலாக செதுக்கி உள்ளனர். இது பாண்டிய மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கோயில். இந்த மாதிரியை  இங்கு வைப்பதால் சுற்றுலா பயணிகள் அந்த கோயிலை நேரில் சென்று பார்க்கும் ஆவலை ஏற்படுத்தும், என்றனர்.

Leave a Reply