ஒரே இடத்தில் 300 ஐன்ஸ்ட்டீன்கள். கின்னஸ் சாதனை
[carousel ids=”68491,68492,68493,68494,68495,68496,68497,68498,68499″]
பிரபல ஜெர்மன் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் அவர்களை தெரியாதவர்கள் உலகில் இருக்க முடியாது. இயற்பியல் மேதையான ஐன்ஸ்ட்டீன், நோபல் பரிசு உள்பட பல்வேறு வகையான விருதுகளை பெற்று உலகம் முழுவதும் புகழப்பட்டவர்.
இந்நிலையில் ஐன்ஸ்ட்டீன் அவர்களின் நினைவு தினம் வரும் 27ஆம் தேதி வித்தியாசமாக அனுசரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு தனியார் அமைப்பு முடிவு செய்தது.
300 நபர்கள் ஐன்ஸ்ட்டீன் போலவே வேடமணிந்து ஒரே இடத்தில் கூடும் வகையில் அந்த நிறுவனம் ஏற்பாடு ஒன்றை செய்தது. அனைவருக்கும் ஐன்ஸ்ட்டீன் போன்ற உடை மற்றும் மீசைகளை அந்த நிறுவனமே வழங்கியது.
ஒரே இடத்தில் 300 ஐன்ஸ்ட்டீன்களை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். இது ஒரு கின்னஸ் சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டது.
இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்ட்டீன் கடந்த 1921ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றர். அவர் கடந்த 1955ஆம் ஆண்டு தனது 76வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.