அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹில்லாரிக்காக நிதி திரட்டும் இந்தியர்கள்.

hilary clintonஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ள ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சாரத்திற்காக நிதியை திரட்டும் முயற்சி தற்போது நடந்து வருகிறது. இந்த நிதி திரட்டலில் இரண்டு இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தற்போது தகவல் வந்துள்ளது.

இதுவரை மொத்தம் ரூ.63 லட்சத்துக்கு மேல் நிதி திரட்டியதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், மேரிலேண்ட் மாகாணத்தைச் சேர்ந்த மஹிந்தர் தக் என்ற பெண் மற்றும் நியூயார்க்கைச் சேர்ந்த தேவன் ஜே.பரேக் ஆகிய 2 அமெரிக்கவாழ் இந்தியர்கள் அதிபர் வேட்பாளர் ஹில்லாரியின் பிரச்சாரத்திற்காக ரூ.2 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளத்.

இதுகுறித்து மஹிந்தர்  தக் கூறும்போது, “அமெரிக்காவுக்கு இப்போது பெண் அதிபர் தேவைப்படுகிறார். அதற்கு ஜனநாயகக் கட்சியில் ஹில்லாரிதான் பொருத்தமான நபர். அவருடைய பிரச்சாரத்திற்கு கண்டிப்பாக என்னால் முடிந்த அளவு அதிகபட்சமாக நிதி திரட்டி கட்சிக்கு தருவேன்’ என்று கூறியுள்ளார்.

மற்றொரு இந்தியரான பரேக், நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் இன்சைட் வென்சர் பார்ட்னர்ஸ் என்ற முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். மேலும் நேஷனல் அகாடெமி மியூசியத்தின் பொருளாளராகவும் பதவி வகிக்கிறார். இவர் ஒபாமா 2012-ல் 2-வது முறை போட்டியிட்டபோது, அவரது தேர்தல் பிரச்சாரத்துக்காக சுமார் ரூ.1.26 கோடி நிதி திரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply