செட்டிநாடு காளான்

download (4)

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 1 (நறுக்கியது)

காளான் – 1 பாக்கெட் (நறுக்கியது)

தக்காளி – 1 (நறுக்கியது)

கடுகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

மசாலாவிற்கு…

வரமிளகாய் – 3

உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

மல்லி – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் காளானை சேர்த்து காளானை நன்கு வேக வைக்க வேண்டும். அடுத்து அதில் தக்காளி, தேவையான அளவு உப்பு, 1-2 டேபிள் ஸ்பூன் அரைத்த மசாலா பொடி சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 2-3 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், செட்டிநாடு காளான் ரெடி!!!

Leave a Reply