சாம்சங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்வாட்ச் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக இணையத்தில் கசிந்து வருகின்றதை வைத்து பார்க்கும் போது அந்நிறுவனத்தின் புதிய கருவி விரைவில் வெளியாகும் என்றே தெரிகின்றது. அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆர்பிஸ் குறிப்பிடப்பட்டாலும் சந்தையில் அந்த கருவி கியர் ஏ என்று அழைக்கப்படும் என்கின்றது சாம்மொபைல் இணையதளம். இந்த கருவி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இதர தகவல்கள் கேலக்ஸி நோட் 5 வெளியீட்டின் போது அறிவிக்கப்படும் என்றும் அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கியர் ஏ என்றழைக்கப்படும் புதிய சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் குறித்து தற்சமயம் வரை வெளியாகி இருக்கும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பாருங்கள்.. சாம்சங் தயாரித்த எக்ஸைனோஸ் பிராசஸர், 4ஜிபி மெமரி, 768 எம்பி ரேம் கொண்டிருக்கும் இந்த கருவியில் பாரோமீட்டர், வை-பை சிம், ஜிபிஎஸ் போன்ற சென்சார்கள் வழங்கப்படும். இந்த கருவி மற்றவைகளை போன்று ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்காது மாறாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட டைஸன் இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.