ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் பயணிகளுக்கு ஏற்படும் அவஸ்தை.

ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் பயணிகளுக்கு ஏற்படும் அவஸ்தை.

[carousel ids=”68622,68623,68624,68625,68626″]

திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு தினமும் பணிநிமித்தம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் மின்சார ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்த ரயில்கள் அனைத்தும் பேசின்பிரிட்ஜ் வரும் வரை பிரச்சனையில்லாமல் வருகின்றது. ஆனால் சிக்னல் காரணத்தை காட்டி பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் தினமும் சுமார் 15 நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் வரை நின்று பயணிகளின் பொறுமையை சோதிக்கின்றது.

இந்நிலையில் சில வேளைகளில் அந்த பகுதியின் ரெயில்வே டிராக் பழுதுகாரணமாக பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திலேயே ரயில் நின்றுவிடுகிறது. பயணிகள் அரக்கபரக்க அந்த ரயிலில் இருந்து இறங்கி வேறு ரயிலிலோ அல்லது பேருந்துகளிலோ தாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் அலுவலகம் செல்லும் ஊழியர்களுக்கு காலதாமதம் ஆவது மட்டுமின்றி பணமும் விரயமாகிறது.

இன்று காலை திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்து கொண்டிருந்த ரயில் ஒன்று பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திலேயே நின்றுவிட்டது. சில நிமிடங்கள் கழித்து, அந்த ரயில் நின்றுகொண்டிருந்த ரயில்வே டிராக் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், கடைசி பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருக்கும் மற்றொரு ரயிலில் பயணிகள் பயணிக்கும்படியும் அறிவிப்பு வெளியானது. வேலைக்கு செல்லும் அவசரத்தில் இருக்கும் பயணிகள் அனைவரும்  அவசர அவசரமாக கடைசி பிளாட்பாரத்திற்கு சென்றனர். இதனால் மனதளவிலும் உடலளவிலும் பயணிகளுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிராக்கில் பழுது இருப்பது முன்பே தெரியாமல் அந்த டிராக்கில் ரயில் வர அனுமதி கொடுத்ததே தவறு. மேலும் வருடத்திற்கு ரூ.24,000 கோடி பராமரிப்புக்கு மட்டும் செலவு செய்யும் ரயில்வே நிர்வாகம், பழுதை முன்கூட்டியே கண்டுபிடிக்காமல் பயணிகளை தொல்லைப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம். பயணிகளின் பரிதாப நிலையை புகைப்படங்கள் எடுத்து பதிவு செய்துள்ளோம்., இனிமேலாவது ரயில்வே துறையினர் பயணிகளை அலைக்கழிப்பதை தவிர்த்து, முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply