ஸ்பெயின் நாட்டு மக்களின் திருமண வயது 16. புதிய சட்டதிருத்தம் அமல்

ஸ்பெயின் நாட்டு மக்களின் திருமண வயது 16. புதிய சட்டதிருத்தம் அமல்

gay pride parade in Jerusalemஇதுவரை திருமண வயது 14 என்று இருந்த ஸ்பெயின் நாட்டில் தற்போது 16 என உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான சட்டதிருத்தம் செய்யப்போவதாக கடந்த 2013ஆம் ஆண்டிலேயே ஸ்பெயின் அறிவித்திருந்தாலும், தற்போதுதான் இந்த சட்டதிருத்தம் நிறைவேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளில் குறைந்தபட்ச திருமண வயதை கொண்டிருந்த நாடு ஸ்பெயின் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமண வயதை உயர்த்த வேண்டும் என யுனிசெஃப் மற்றும் குழந்தைகள் உரிமை அமைப்புகளும் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்திற்கு யுனிசெஃபும் அந்நாட்டில் உள்ள குழந்தைகள் உரிமை அமைப்புகளும் வரவேற்றுள்ளன.

மேலும் சில ஐரோப்பிய நாடுகளில் குறைந்தபட்ச திருமண வயது உள்ள நாடுகள் பின்வருமாறு: எஸ்டோனியா 15 வயது, ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளில் 16 வயது, பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் 18 வயது என உள்ளது.

ஸ்டாடிஸ்டிகல் இன்ஸ்டிடியூட் ஆஃப் காடலோனியா மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, 2013ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களின் சராசரி வயது 33.6ஆக இருந்துவருகிறது. பெண்களின் சராசரி வயது 32.6.

Leave a Reply