எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டும்

 

46572037-7d8e-4f4f-a5a0-7b1079ebf164_S_secvpf

ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது. நோயை கண்டு பிடிக்க தாமதம் ஏற்படுவதால் தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமைகின்றன. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்வதுதான் வருங்காலம் நலமானதாக இருக்க நீங்கள் செய்யும் முதலீடாகும். எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்யலாம்?

• 2 வயது முதல்–ஆண்டுக்கு ஒருமுறை பல் பரிசோதனை.

• 3 வயது முதல் – ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை.

• 18 வயதுமுதல்– ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை.

• 18 வயது முதல் (பெண்கள்) – ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனை.

• 30 வயது முதல்- ஆண்டுக்கு இருமுறை சர்க்கரை பரிசோதனை.

• 30 வயது முதல் (பெண்கள்) – ஆண்டுக்கு இருமுறை சர்க்கரை பரிசோதனை மற்றும் மார்பக பரிசோதனை.

• 40 வயது முதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கிட்னி மற்றும் லீவர் பரிசோதனை.

• 50 வயது முதல் – ஆண்டுக்கு ஒரு முறை கண், காது, சிறுநீரியல் மற்றும் மூட்டு சிகிச்சை பரிசோதனை.

• 50 வயது முதல் (பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கண், காது, சிறுநீரியல், எலும்பு, மூட்டு, கருப்பை புற்றுநோய் பரிசோதனை.

– எனவே நீங்கள், உங்கள் வயதுக்கேற்ற உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதைவிட முழு உடல் பரிசோதனை செய்வது மிக மிக நல்லது.

Leave a Reply