அஜீத்தின் மர்மங்களை கண்டுபிடித்த கொல்கத்தா பெண் வக்கீல்

அஜீத்தின் மர்மங்களை கண்டுபிடித்த கொல்கத்தா பெண் வக்கீல்

shruthihassanஅஜீத் நடித்து ‘தல 56’ படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் பாட்ஷா படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியான ஸ்ருதிஹாசன் வேடம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கொல்கத்தாவின் வசிக்கும் பெண் வக்கீல் வேடத்திலும் அஜீத் டாக்சி டிரைவர் வேடத்திலும் நடித்து வருகின்றனர் என கூறப்படுகிறது. அஜீத்தின் டாக்சி டிரைவர் வேடத்தின் பின்னணியில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் வக்கீலாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாகவு கூறப்படுகிறது.

கொல்கத்தாவின் தொடர்ந்து ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்த சிறுத்தை சிவா திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படப்பிடிப்புடன் கிட்டத்தட்ட இந்த படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைய இருப்பதாகவும் அதன்பின்னர் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே மீதி இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் அஜீத்தின் தங்கையாக நடிக்கும் லட்சுமிமேனனுக்கு ஜோடியாக மங்காத்தா படத்தில் போலீஸாக நடித்த அஸ்வின் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளத்.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், அஸ்வின் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். ஏ.எம்.ரத்னம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸாகும் என தெரிகிறது.

Leave a Reply