ரணில் விக்ரமசிங்கே சாதாரண திருடன் அல்ல மிகப் பெரிய திருடன். கோத்தபய

ரணில் விக்ரமசிங்கே சாதாரண திருடன் அல்ல மிகப் பெரிய திருடன். கோத்தபய

ranilஇலங்கையில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு, ரணில் விக்ரமசிங்கே அவர்களுக்கும் இடையே கடும் விமர்சனங்கள் நடைபெற்று வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் தரக்குறைவான வார்த்தைகளில் வசைமொழி செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ராஜபக்சேவின் சகோதரரும்  இலங்கை முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது, ரணில் விக்ரமசிங்கே சாதாரண திருடன் அல்ல மிகப் பெரிய திருடன் என்றுகடுமையாக சாடியுள்ளார்.

இன்று காலை சிங்கள ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நானும், ராஜபக்சேவும் வசிப்பது மிரிஹான பிரதேசத்தில். அப்பிரதேசத்தில் விடுதலை புலிகள் பயன்படுத்திய வெள்ளை வேன், ஆயுதங்களுடன் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சயனைட் குப்பிகளுடன் 4 விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் இலங்கையர் உயிரிழந்துள்ளார். இவ்வாறான நிலைமையின் கீழ் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பெரிய அளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

திருடர்கள் எனக் கூறி அரசாங்க அதிகாரிகளை கைது செய்தார்கள். விசாரணைகளை நடத்தினார்கள். எனினும் விசாரணைகளின் முடிவுகளை மக்களுக்கு கூறவில்லை. ரணில் விக்ரமசிங்கே என்பவர் வெறும் திருடன் அல்ல; மிகப்பெரிய திருடன். பொய்களை மாத்திரமே கூறி மக்களை ஏமாற்றியுள்ளார்” என குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply