சன் குழுமம் ஏலத்தில் பங்கேற்றால் நாங்கள் பாதிக்கப்படுவோம். திடீரென முளைத்த வழக்கு

“சன் குழுமம் அலைவரிசை ஏலத்தில் பங்கேற்றால் நாங்கள் பாதிக்கப்படுவோம். திடீரென முளைத்த வழக்கு

fmஎப்.எம். வானொலி அலைவரிசை ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்பதற்கு எதிராக  ‘என்டர்டெய்ன்மென்ட் நெட்வொர்க் இந்தியா நிறுவனம்’ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சன் குழுமத்திற்கு பாதுகாப்பு சான்று அளிக்கப்படாததால், எப்.எம். வானொலி அலைவரிசை அந்த நிறுவனம் ஏலத்தில் பங்கேற்பதற்கு சமீபத்தில் மத்திய அரசு  அனுமதி மறுத்திருந்தது. இதனை எதிர்த்து சன் குழுமம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, சன் குழுமம் எப்.எம். ஏலத்தில் பங்கேற்க அனுமதி அளித்தார். அதே நேரத்தில் சன்குழுமம் தாக்கல் செய்யும் ஏல விவரங்களை சீலிடப்பட்ட உறையில் மூடிவைத்திருக்க வேண்டும் என்றும், ஏலத்தில் பங்கேற்றாலும், பிரதான வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், “சன் குழுமம் எப்.எம். அலைவரிசை ஏலத்தில் பங்கேற்றால் நாங்கள் பாதிக்கப்படுவோம் என்றும் அதனால் சன் குழுமம் இந்த ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும்  ‘என்டர்டெய்ன்மென்ட் நெட்வொர்க் இந்தியா நிறுவனம்’ சார்பில் உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, இதுகுறித்து ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சன் குழுமத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Leave a Reply