ஸ்மார்ட்போன் கழுகு!

3_2485084f

ஸ்மார்ட் போன் கையில் இருந்தாலே எப்போதும் புதிய செயலிகள் மீது ஒரு கண் இருக்கும். ஆனால் செயலிகளைத் தேர்வு செய்யும்போது அவற்றின் பயன்பாட்டில் கவனம் வைக்கிறோமே ஒழிய அந்தச் செயலி பாதுகாப்பானதுதானா என்பது பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.

அதிலும் குறிப்பாகச் செயலிகள் கோரும் அனுமதிக்கு எல்லாம் பச்சைக்கொடி காட்டுவிடுகிறோம். விளைவு, இந்தச் செயலிகள் போன் பின்னணியில் இருந்தபடி பலவிதமான விவரங்களைச் சேகரித்து விளம்பர நிறுவனம் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பி வைக்கின்றன. இந்த நிலைக்கு மாறாக போனில் உள்ள செயலிகள் மீதெல்லாம் ஒரு கண் வைத்திருக்க விரும்பினால் அந்தப் பணியை பிரைவசி ஹாக் செயலி செய்கிறது.

எந்தச் செயலிக்கு என்ன என்ன அனுமதி அளித்தோம் என்பதை நீங்கள் மறந்துவிட்டாலும், பிரைவசி ஹாக் செயலி எல்லாவற்றையும் ஆய்வு செய்து அவற்றின் செயல்பாடு குறித்து தகவல் அளிக்கிறது. செயலிகள் என்ன வகையான விவரங்களை எல்லாம் சேகரிக்கின்றன என்பதன் அடிப்படையில் அவற்றின் பாதுகாப்புத் தன்மை குறித்தும் எச்சரிக்கிறது. புதிய செயலியை டவுன்லோடு செய்வதற்கு முன்னதாகவும் இந்தச் செயலி மூலம் ஸ்கேன் செய்து பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://goo.gl/Mh7HwH

Leave a Reply