தேவையான பொருட்கள்
மீன் – ½ கிலோ
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 6 பல்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை –தேவைக்கேற்ப
கசகசா – 3 டீஸ்பூன்
கொத்துமல்லி – கைப்பிடி
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2 (சிறியது)
கொடம்புளி – கோலி குண்டு அளவு
பொட்டுக்கடலை – 100 கிராம்
கடுகு – ½ டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1 ½ டீஸ்பூன்
செய்முறை
தேங்காய், கசகசா பொட்டுக்கடலை மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, சோம்பு, வெந்தயம், மிளகு இவை அனைத்தும் நன்றாக வதக்கி, அதன்பின் கீறிய இரண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய சின்ன மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதன்பின் தேவையான மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி பின் நறுக்கிய தக்காளி மற்றும் புளி கரைசல் கலந்து ஒரு கொதி நிலை வந்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். பினனர்் தயார் நிலையில் உள்ள மீன் மற்றும் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, மல்லித் தழையை தூவி இறக்கவும்.
குறிப்பு
புட்டு, பரோட்டா, சுடு சோறு ஆகியவற்றுக்கு இந்த மலபார் மீன் கறி நல்ல இணை உணவாகப் பொருந்தும்.