யாகூப் மேமன் அப்பாவியா? சல்மானுக்கு எதிராக தலைவர்கள் கண்டனம்.

யாகூப் மேமன் அப்பாவியா? சல்மானுக்கு எதிராக தலைவர்கள் கண்டனம்.

salmankhanமும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பாலிவுட் நடிகர் சல்மான்கான் அதன் பின்னர் அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார்.

யாகூப் மேமன் தூக்கு குறுத்து பாலிவுட் நடிகர் சல்மான்கான் தனது டுவிட்டரில் “யாகூப் மேமன் சகோதரர் டைகர் மேமன் செய்த தவறுக்காக அப்பாவியான யாகூப் மேமன் தூக்கு மேடை ஏறுகிறார். அவரை விட்டு விட்டு, தப்பியோடிய டைகர் மேமனை தூக்கிலிடுங்கள். இந்த விவகாரம் பற்றி 3 நாட்கள் கருத்து தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால், பயமாக இருக்கிறது. இது ஒருவரது குடும்பம் சார்ந்த விவகாரம். ஒரு அப்பாவியை கொல்வது, ஒட்டுமொத்த மனிதாபிமானத்தையே கொல்வதற்கு சமமானது. டைகர் மேமன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தால், அவரை அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

257 பேரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு நிதியுதவி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அது நிரூபணம் ஆகி மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் யாகூப் மேமனை, சல்மான்கான் ‘அப்பாவி’ என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாகூப் மேமன் பற்றிய சல்மான்கானின் கருத்தை பா.ஜ.க. மற்றும் சிவசேனா உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

சல்மான்கானின் அவரது தந்தையும், முன்னாள் நடிகருமான சலீம்கானும் எதிர்ப்பு தெரிவித்தார். தந்தை உள்பட பிரபலங்களின் எதிர்ப்பை அடுத்து, யாகூப் மேமன் பற்றிய தன்னுடைய கருத்தை திரும்ப பெற்றுக் கொண்ட சல்மான்கான், இதற்காக பகிரங்க மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

மேலும், யாகூப் மேமனை தான் ‘அப்பாவி’ என கூறவில்லை என்றும், நாட்டின் நீதித்துறை மீது தனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றும் சல்மான்கான் டுவிட்டரில் மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ”என்னுடைய டுவிட்டர் பதிவுகள் மதங்களுக்கு எதிரானது என்று கருதுபவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். அனைத்து மத நம்பிக்கைகளையும் நான் மதிக்கிறேன்” என்றும் அவ்ர் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply