பிரதமர் மோடி இதுவரை சுற்றுப்பயணம் செய்யாத நாடு எது? நீதிமன்ற உதவியாளர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று நரேந்திரமோடி தலைமையிலான அரசு பதவியேற்றாது. பிரதமர் பதவியை ஏற்ற நரேந்திரமோடி கடந்த 15 மாத காலத்தில் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அவருடைய வெளிநாட்டு பயணங்களை எதிர்க்கட்சிகளும், சமூக வலைத்தளங்களும் கேலியாகவும் கிண்டலாகவும் விமர்சிக்கும் அளவுக்கு கூட வந்துவிட்டது. இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வியில் நரேந்திர மோடி பார்வையிடாத நாடு எது? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் நடந்த நீதிமன்ற உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு சமீபத்டில் நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று பின்வரும் நாடுகளில் நரேந்திர மோடி பார்வையிடாத நாடு எது?
அ) அமெரிக்கா, ஆ) ஆஸ்திரேலியா, இ) இங்கிலாந்து, ஈ) தென் கொரியா
பிரதமர் மோடி உலக வரைபடத்தை கையில் வைத்து கொண்டு அடுத்து எந்த நாட்டிற்கு செல்லலாம் என்று ஆராய்வது போல கேலி சித்திரங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நீதிமன்ற உதவியாளர் பணிக்காக நடந்த எழுத்துத் தேர்வில்தான் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களை விமர்சிக்கும் வகையில் கேட்கப்பட்ட இந்த கேள்வி குறித்து கேரள நீதிமன்றம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த கேள்விக்கான சரியான விடை இங்கிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.