உயிர் போகும் நேரத்திலும் 2 வயது குழந்தையை காப்பாற்றிய சீனத்தாய். அதிர்ச்சி வீடியோ

உயிர் போகும் நேரத்திலும் 2 வயது குழந்தையை காப்பாற்றிய சீனத்தாய்

[carousel ids=”68907,68908,68909,68910″]

சீனாவில் உள்ள ஜிங்ஸூ என்ற நகரில் அமைந்துள்ள பிரமாண்டமான ஷாப்பிங் மால் ஒன்றில் எஸ்கலேட்டரில் சிக்கிய பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். ஆனால் அவர் தனது 2 வயது மகனின் உயிரை உயிர் போவதற்கு முன் கடைசி நேரத்தில் காப்பாற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரபல ஷாப்பிங் மால் ஒன்றிற்கு தனது இரண்டு வயது மகனுடன் சென்ற 30 வயது பெண் ஒருவர் இரண்டாவது மாடிக்கு செல்வதற்காக எஸ்கலேட்டரில் சென்றார். எஸ்கலேட்டர் மேல்புறம் வந்த பிறகு வெளியே வர காலைவைக்கும் போது, அவர்  கால் வைத்த இடம் திடீரென உடைந்து விழுந்தது. இதனால் அவர் ரோலாகி கொண்டிருந்த எஸ்கலேட்டரில் எதிர்பாராமல் சிக்கினார். ஆனால் தனது உயிரை பொருட்படுத்தாமல்  தனது 2 வயது மகனை எஸ்கலேட்டருக்கு வெளியே தள்ளிவிட்டு அந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

எஸ்கலேட்டரின் மேற்பகுதியில் நின்று கொண்டிருந்த ஷாப்பிங் மால் கடைக்கார ஊழியர்கள் இருவரிடம் மகனை தள்ளிவிட்டார். உதவியாளர்கள் இவரையும் காப்பற்ற முயற்சி செய்து இழுத்துப் பார்த்தனர், ஆனால் இயக்கத்திலிருந்த எஸ்கலேட்டர் அவரை உள்ளுக்குள் இழுத்துவிட்டது. இவையெல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. 4 மணி நேரம் கழித்தே இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பரிதாபமாக பலியான பெண்ணி பெயர் சியாங் லிஜுவான் என்று விசாரணையில் தெரியவந்தது.

சீனாவில் ஏற்கனவே கடந்த 2012-ம் ஆண்டு பெய்ஜிங்கில் செயின் ஸ்டோர் ஒன்றில் 9 வயது சிறுவன் ஒருவனும், 2011-ம் ஆண்டில் பெய்ஜிங் சப்-வே நிலையம் ஒன்றில் இருந்த எஸ்கலேட்டரில் 13 வயது சிறுவன் ஒருவனும் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=daWIW0qYkdk

Leave a Reply