நடிகராக மாறிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
இயக்குனர் ரஞ்சித் அறிமுகமான அட்டக்கத்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன், அதன் பின்னர் பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, மெட்ராஸ், 36 வயதினிலே போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியை ரஞ்சித் இயக்கவுள்ள ‘காளி’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தனது பிசியான ரிக்கார்டிங் பணிகளுக்கு இடையே ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ‘இறைவி’ படத்தில் ஒரு பாடகன் கேரக்டர் வருகிறது. இந்த வேடத்தில் நடிக்கத்தான் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அதுமட்டுமின்றி இந்த படத்தில் அவர் ஒரு பாடலையும் பாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, கருணாகரன், அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.