எங்கள் நாட்டு பாதுகாப்பு கிரிக்கெட்டை விட முக்கியம். பி.சி.சி.ஐ செயலாளர் அதிரடி

cricketபாகிஸ்தான் தீவிரவாதிகள் நேற்று பஞ்சாப் மாநிலத்தில் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவின் பாதுகாப்பை விட பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது முக்கியமில்லை என்று பி.சி.சி.ஐ செயலாளர்  அனுராக் தாக்கூர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்த, இரு நாட்டு கிரிக்கெட் வாரியக்ன்களும் முயற்சித்து வரும் நிலையில் இரு நாட்டுக்கும் பொதுவான இடத்தில் 2 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளை நடத்த இருதரப்பு அதிகாரிகளும் ஆலோசனை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலால் அதிர்ச்சி அடைந்துள்ள  பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் அவர்களிடம் “இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையே மீண்டும் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுமா? என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் ”ஜம்மு, பஞ்சாப் மாநிலங்கள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தீவிரவாதிகள் தாக்குதலில் இந்தியர்கள் தொடர்ந்து உயிரை இழந்து வருகின்றனர்.

ஒரு இந்தியராக இந்த சூழலில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி தேவையில்லை என்றே நினைக்கிறேன். எங்கள் தேசம் அமைதியாக இருந்தால்தான் நாங்கள் கிரிக்கெட்டை பற்றி யோசிக்க முடியும். எங்கள் நாட்டு பாதுகாப்பு எங்களுக்கு கிரிக்கெட்டை விட முக்கியம்” என்றார்.

Leave a Reply