நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும் மல்கோவா மாம்பழம்

e09d46f7-cb0b-46d4-aed4-b471d37093cd_S_secvpf

100 கிராம் மாம்பழச்சதையில்- நீர்ச்சத்து 81 கிராம். நார்ச்சத்து 0.70 கிராம். மாவுச்சத்து 16 கிராம்.

கொழுப்பு 0.40 கிராம், புரதம் 0.60 கிராம், உலோக உப்புகள் 0.40 கிராம், கரோட்டின் 27.43 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 16 மிலி கிராம், தயாமின் 0.008 மிகி, ரிபோபிளேவின் 0.09 மிகி, நியாசின் 0.09மிகி, கால்சியம் 14 மிகி, பாஸ்பரஸ் 16 மிகி, இரும்பு 1.30 மிகி என்ற அளவில் சத்துக்கள் உள்ளன.

மருத்துவ பயன்கள்:

1) மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.

2) தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும் கோடை மயக்கத்தை தீர்க்கும்.

3) மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.

4) பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

5) மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும்.

6) மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும்.

7) கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

8) மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்த சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம், மற்றும் தோல் நோய் தொல்லைகளை நீக்கும்.

Leave a Reply