சிக்கன் – மட்டன் இனி சாப்பிடுவதற்கு மட்டுமில்லை. அணிவதற்கும்தான்.

சிக்கன் – மட்டன் இனி சாப்பிடுவதற்கு மட்டுமில்லை. அணிவதற்கும்தான்.

meatஇதுவரை பருத்தி மற்றும் செயற்கை இழைகளால் நெய்யப்பட்ட ஆடைகளைத்தான் நாம் பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில் அமெரிக்காவில் இறைச்சிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட இழைகளால் ஆன ஆடைகளை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

பட்டுப்பூச்சிகளை கொன்று அதில் இருந்து  எடுக்கப்பட்ட பட்டு நூல்களில் ஆன உடைகளை அணியவே ஒருசிலர் விரும்பாத நிலையில் தற்போது விலங்குகளின் இறைச்சிகளில் இருந்து நூலிழை உருவாக்கப்படுவதை அறிந்து பலர் திடுக்கிட்டுள்ளனர். இந்த புதிய முயற்சிக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும், அந்த நிறுவனம் தனது முயற்சியை கைவிடப்போவதில்லை என உறுதியாக கூறியுள்ளது.

விலங்குகளின் இறைச்சிகளை பதப்படுத்தி அதில் சில கெமிக்கல் வகைகளை சேர்த்து நூலிழைகள் தயாரிக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் ஒரு நிமிடத்திற்கு 200 மீட்டர் நூலிழைகள் தயாரிக்க முடியும் என்பதை பரிசோதனையில் தெரியவந்துள்ளதகவும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் இறைச்சி இழைகளினால் செய்யப்பட்ட ஆடை விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. எனவே சிக்கன், மட்டன் போன்ற இறைச்சிகள் இனி உணவாக மட்டுமின்றி விரைவில் உடையாகவும் மாறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply