முதுமையில் காது கேட்கும் திறன் இழப்பதன் மற்ற காரணங்கள்

5e9b4b19-0a04-4023-9b44-b0e3239f0d29_S_secvpf

சர்க்கரை நோய், ரத்த ஓட்டம் சீரின்மை, சதா அதிக சத்தத்தில் இருத்தல், சில மருந்துகள், பரம்பரை, புகை பிடித்தல், இது ஆரம்பிக்கும் பொழுது முதலில் பெண்கள் சிறு குழந்தைகளின் குரல் கேட்பதில் பிரச்சினை இருக்கும். பிறர் பேசுவது தெளிவாக கேட்காது. சில ஒலிகள் அதிக சத்தத்துடன் கேட்கும். அதிக நெரிசல் உள்ள இடங்களில் பேசுவது கேட்காது.

‘எஸ்’ ‘த்’ இந்த ஓலிகளின் உச்சரிப்பு கேட்காது. காதில் ஏதோ ஒலித்துக் கொண்டே இருக்கும். ரேடியோ டி.வி.யினை அதிக சத்தத்துடன் கேட்பர் பிறர் பேசுவதை திரும்ப திரும்ப சொல்ல சொல்வார்கள். போனில் பேசுவது கேட்காது மருத்துவரே பரிசோதனைக்கு பிறகு பாதிப்பினை உறுதி செய்ய முடியும்

இதனை தவிர்ப்பது எப்படி?

அதிக சத்தமுள்ள இடங்களில் இருக்காதீர்கள், அப்படி இருந்தால் காதுகளை பஞ்சு கொண்டு பொத்தி விடுங்கள் சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருங்கள் காதில் ஏதோ ஒரு சத்தம் கேட்பது போல சிலருக்கு ஏற்படும். ஆனால் அது வெளிச்சத்தமாக இருக்காது. இந்த பாதிப்புடையோருக்கு இதனால் அதிக சங்கடம் இருக்கும். சிலர் பேசும் போது அதனை முறையாக கேட்க முடியாமல் இந்த சத்தம் தொந்தரவு செய்யும். அதனால் பாதிப்புடையோர் மிகுந்த மன உளைச்சல் பெறுவர். இது எந்த வயதினருக்கும் ஏற்படலாம். முதுமையில் இது அதிகம் காணப்படும்.

நோய்க்கான காரணங்கள் :

மிக அதிக அளவு ஆஸ்பிரின் மாத்திரைகள், சில சிறு நீரக மருந்துகள், மலேரியா மருந்துகள், சில கருவி தாக்குதல் மருந்துகள், சில புற்று நோய் மருந்துகள், தலை, கழுத்தில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்டிரால், காதில் அதிக அழுக்கு இவை காது கேட்கும் நோய்க்கு காரணமாகின்றன. இதைவிட அதிர்ச்சிகரமான ஒன்று அதிக சத்தத்தில் இருப்பவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது. அதிக சத்தத்திலே இருக்கும் கர்ப்பிணிக்கு பிறவிக்குறைபாடுடன் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.

அதிக சத்தத்தின் சூழ்நிலையில் இருப்பவர் எப்பொழுதும் கோபப்பட்டபடியே இருப்பார். வாகன சத்தத்தில் மட்டுமே இருதய பாதிப்பில் இறந்தவர் எண்ணிக்கை 2, 10,000 ஒரு வருடத்திற்கு என ஐரோப்பாவில் ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. சைலன்சர்கள் இல்லாத மோட்டார் பைக்குகள், விடாமல் ஹாரன் ஒலி எழுப்பும் வாகனங்கள் இவற்றை ஓட்டுபவர்கள் அவர்கள் உணராமலேயே பலர் இறப்புக்கு காரணம் ஆகின்றனர். சத்தத்தின் காரணமாக ஏற்படும் ஹார்மோன் மாறுதல்களால் பலர் பக்கவாத நோய்க்கு ஆளாகின்றனர்.

பாதுகாப்பாக கேட்பதற்கு கடைபிடிக்க வேண்டியவை: 

* அதிக சத்தம் இருக்கும்பொழுது பஞ்சைச் கொண்டோ இல்லை காதை பொத்தும் உபகரணங்களைக்கொண்டோ காதுகளை பொத்திக்கொள்ளுங்கள் அதிக சத்தமான சூழ்நிலையில் தொடர்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அவ்வப்போது அங்கிருந்து நகர்ந்து 10 நிமிடம் காதுகளுக்கு ஓய்வு கொடுங்கள்.

* மிக அதிகமான சத்தத்தில் பாட்டு கேட்காதீர்கள் அருகில் இருப்பவர் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டாலும் உங்கள் காது பாதிக்கப்படும்.

* மியூசிக்ப்ளேயரில் 60சதவீதம் வரையே சத்தத்தினை வைத்துக் கொள்ளுங்கள் டி.வி., ரேடியோவிற்கும் இது பொருந்தும்.

* உங்கள் கார், பைக்குகளை சத்தம் இல்லாமல் பாதுகாப்பது உங்கள் கடமையாகும்.

* பட்டாசு, வெடிகளில் அதிக சத்தத்துடன் கூடியதனை உங்களுக் காகவும், சமுதாய நன்மைக்காகவும் கடைபிடியுங்கள்.  செல்போன் ஆடை மனிதனுக்கு எந்த அளவு முக்கியமோ அந்த அளவுசெல்போன் மனிதனுக்கு இன்றியமையாதது ஆகி விட்டது. வேலைக்காக போனில் பேசுவது என்பது போய் காதும், செல்போனும் இளைய சமுதாயத்திற்கு ஒட்டியே போய் விட்டது.

விஞ்ஞான முன்னேற்றம் அநேக நன்மைகளைத் தந்துள்ளது. ஆனால் அதனை அளவோடு பயன் படுத்த வேண்டும். அளவு மீறும் பொழுது அது மிகுந்த ஆபத்தினை விளை விக்கின்றது. நாள் ஒன்றுக்கு மொத்தம் 60 நிமிடங்களுக்கு மேல் போனில் பேசுபவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. செல்போன் உஷ்ணத்தினால்

* தலை, காதில் எரிச்சல் உணர்வு இருக்கும்.

* மனநிலைமாறுபடும்.

* கவனக்குறைவு ஏற்படும்.

* காதில் சத்தம் குறிப்பாக விசில் போல் இருக்கும்.

* மிக சீக்கிரமாக கண்ணில் புரை ஏற்படும்.

* தூக்கமின்மை.

* காது கேளாமை.

* மூளையின் செயல்பாட்டுத்திறனில் மாறுபாடு.

* உள் காதில் இருக்கும் திரவத்தில் மாறுபாடு?

* உள் காது பாதிப்பு.

* அதிக சத்ததினால் காது பாதிப்பு.

* தலையில் ஏதோ சத்தம்.

* ஏதோ காதில் கேட்பது போன்ற மாயை.

* அதிக ப்ளு டூத், ஹெட் போன் இரண்டினையும் மிக அதிகமாக பயன்படுத்துவதால் எப்பொழுதும் காதில் ஏதோ ஒலி கேட்பது போன்றமாயை.

* சோர்வு, மயக்கம் 2 வாட்ஸ் கொண்ட செல்போன்கள் பாதுகாப்பே என்றாலும் இது முக்கிய தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்துவதே நல்லது. ஜாலி, தமாஷ், அரட்டை இவற்றிக்காக மணிக்கணக்கில் பயன்படுத்தும் பொழுது பின் விளைவுகள் தவிர்க்க முடியாது. செல்போன் உபயோகப்படுத்தப்படாத நேரத்திலும் பலமான சிக்னல்களை கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.

சில பொதுவான பாதுகாப்பு முறைகள்:

தொடர்ந்து செல்போனை 10 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தாதீர்கள் தொடர்ந்து பேசும் பொழுது அதிக உஷ்ண சக்தி போனில் இருந்து வெளியாகின்றது.

* படுக்கைக்கு அருகில் செல்போன் வைத்து தூங்காதீர்கள்.

* குழந்தைகளிடம் செல்போன் கொடுக்காதீர்கள் கதிர் வீச்சு குழந்தைகளை அதிகம் தாக்கும்.

* செல்போன் பேசிக்கொண்டு கியாஸ் அடுப்பு, பெட்ரோல் பங்க் அருகில் நிற்காதீர்கள் திடீரென தீப்பிடிக்கும் அபாயம் உண்டு.

* போனை சார்ஜ் செய்து கொண்டே பேசாதீர்கள்.

* மின்னல் இருக்கும் போது செல்போன் பயன் படுத்தாதீர்கள்.

* தேவையான நேரம் மட்டுமே சார்ஜ் செய்யுங்கள் தொடர்ந்து செல்போனை காதருகில் வைத்து பேசாதீர்கள். ஸ்பீக்கர் (அ) ப்ளூடூத் (அ) ஹெட்போன் உபயோகியுங்கள் இதுவும் சில நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அதிக நேரம் செல்போனில் பேசுவது உள் காதினை அதிகமாக பாதிக்கும். பலருக்கு வலது பக்க காதின் அருகில் தொடு உணர்வு குறைந்து வருவதன் காரணம். அதிக நேரம் வலது காதில் போனை உபயோகிப்பது தான் போன் சார்ஜ் செய்யும் பொழுதும், பேசும் பொடுதும் அதிக சூடாகி விட்டால் போனை உடனடி மாற்றி விடுங்கள். டாக்டர் கமலி ஸ்ரீபால்.

Leave a Reply