இறைவன் தரும் வாய்ப்பு!

11209572_10205363770517960_2186860506175427053_n

எத்தனை அயோக்கியனாக இருந்தாலும் அவன் திருந்த, சிந்திக்க இறைவன் ஒரு வாய்ப்பை அளிப்பான். இரணியனுக்கு அந்த வாய்ப்பு நரசிம்மபிரபுவின் மடியில் படுத்திருந்தபோது கிடைத்தது.அவன் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை.

ராவணனுக்கு அந்த வாய்ப்பு “இன்றுபோய் நாளைவா” வில் கிடைத்தது. அவனும் அதை கோட்டை விட்டான்.

துரியனுக்கு கண்ணன் தூதின்போதுகிடைத்தது.

விஸ்வரூபமெடுத்து நாராயணனாய் துரியன் முன் நின்று தான் யார் என்பதை உணர்த்தி துரியன் சிந்திக்க ஒரு வினாடியை கொடுத்தான் இறைவன். இதை “moment of truth” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
ஒவ்வொரு மனிதருக்கும் தன் வாழ்நாளில் ஒருமுறை இந்த “moment of truth” வரும்…..
அந்த வினாடியில் எடுக்கும் முடிவு தான் அவர்கள் வாழ்க்கையை மாற்றும்.
அருச்சுனனுக்கு போரின்போது இந்த போது குழப்பம் நேர்ந்தது. கீதையை உபதேசித்து “போரிடுகிறாயா,வில்லை கீழே போடுகிறாயா?” என்று கேட்டான் இறைவன்.
கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பற்றிக்கொண்டான் அருச்சுனன்.
கர்ணன் முன் தோன்றி அவன் திருந்த ஒரு சந்தர்ப்பம் அளித்தான் இறைவன்.
செஞ்சோற்றுகடனின் பேரில் அதை முட்டாள்தனமாக நிராகரித்தான் கருணன்.
கும்பகருண்னைபோல் கருணனும் செஞ்சோற்றுகடனுக்காக இறைவன் அளித்த ஒரு வாய்ப்பை நழுவவிட்டான்….
பாகவதத்தில், புராணத்தில் இது வழக்கமாக கானப்படும் நிகழ்வுதான்.
இறைவன் யாரையும் உடனே தண்டிப்பதில்லை. திருந்த எத்தனை தூரம் சந்தர்ப்பம் தர முடியுமோ அத்தனை தூரம் சந்தர்ப்பம் கொடுக்கிறான்.
இரணியனை எப்போது அவன் கொன்றான்?
பிரகாலாதனை வருடக்கனக்காய் சித்திரவதை செய்தபோதும் அவன் திருந்த சந்தர்ப்பம் கொடுத்து காத்திருந்தான்….
ஒரு சிறுவனை கூட தன்னால் கொல்ல முடியவில்லை என்பதை உனர்ந்தும் இரணியன் திருந்தவில்லை.
இறுதியில் நரசிம்மமாய் வந்து இரணியனை எடுத்து தன் மடிமேல் அமர்த்தி அவன் விழிகளை உற்றுநோக்கினான் நாராயணன்.
அப்போதும் இரணியன் மனதில் துளி பக்தி வரவில்லை.துளியும் அவன் திருந்தவில்லை.
இரணியனின் விழிகளில் நாராயனன் கண்டது வெறுப்பைத்தான்.
இனிமேல் இவன் திருந்தவே மாட்டான் என்பதை அறிந்தபின்னரே அவன் வயிற்றை கிழித்து அவனை மாய்த்தான் நாராயணன்.
ராமாவதரத்திலும் அதுதான் நடந்தது.
ராமன் பரசுராமனை வென்றபோதே ராமாயணம் முடிவுக்கு வந்துவிட்டது என்பார்கள்.
ஏன் எனில் ராவனனை வென்றவன் கார்த்தவீரியார்சுனன்.கார்த்த வீரியாசுனனை கொன்றவன் பரசுராமன். பரசுராமனை ராமன் வென்றபோதே ராம,ராவன யுத்தத்தின் முடிவு தெரிந்துவிட்டது.
ராவணனை கட்டி வனமெங்கும் இழுத்துபோன வாலியை கொன்ரபோது அதுமீண்டும் ஊர்ஜிதமானது.
அதன்பின் நடந்ததெல்லாம் ராவணன் திருந்த தரப்பட்ட சந்தர்ப்பமே…
ஆயுதமேந்தி தோற்ற ராவணனை அன்றே கொல்லாமல் “இன்று போய் நாளை வா” என சொல்லி அவன் திருந்த மீண்டும் ஒரு சந்தர்ப்பம் தந்தான்.
இறுதிவரை ராவணன் திருந்தவில்லை

Leave a Reply