ரீயூனியன் தீவில் ஒதுங்கிய விமானத்தின் பாகம் MH 370 விமானத்தின் பாகமா? பெரும் பரபரப்பு
[carousel ids=”69134,69136,69137,69138,69139″]
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீனத் தலைநகர் பெய்ஜிங் நகருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் மலேசியன் ஏர்லைன்ஸின் எம்.ஹெச்.370 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 5 இந்தியர்கள் உள்பட 227 பயணிகள், 12 விமானப் பணியாளர்கள் பயணம் செய்தனர். விமானம்புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் அந்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த விமானம் மாயமாய் மறைந்த்கது. அந்த விமானத்தில் இருந்த 239 பேர்களின் கதி என்ன என்றும் 16 மாதங்கள் ஆகியும் விமானத்தின் இருப்பிடம் குறித்தும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. இந்நிலையில், விமானம் மாயமாகி 16 மாதங்களுக்குப் பின்னர் தற்போது MH 370 விமானத்தின் பாகங்கள் இந்தியப் பெருங்கடலின் லா ரியூனியன் தீவில் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்திய பெருங்கடலில் உள்ள “ரியூனியன்’ என்ற திவு ஒன்றில் MH370 விமானத்தின் பாகம் ஒன்று ஒதுங்கியுள்ளதாக பிரபல இணணயதள செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டு அந்தப் பாகத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. அந்த பாகத்தில் “657பிபி’ என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து ஆய்வு செய்ததில் அது போயிங் 777 ரக விமான இறக்கை பாகத்தின் தயாரிப்புக் குறியீட்டு எண் எனத் தெரிய வந்ததாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இதுகுறித்து மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனமோ, போயிங் நிறுவனமோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
ரியூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்டது போயிங் 777 ரக விமானத்தினுடையது என்பது ஏறத்தாழ உறுதியாகி விட்டதாகவும், மாயமான எம்.ஹெச்.370 விமானம் குறித்த மர்மம் விரைவில் விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் மலேசிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மலேசிய போக்குவரத்துத் துறை இணையமைச்சர் அப்துல் அஜீஸ் கப்ராவி கூறியதாவது: ரியூனியன் தீவில் கரையொதுங்கியுள்ள பொருள், போயிங் 777 ரக விமானத்தின் பாகம் என்பது நிச்சயம். அது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்தானா? என்பதை உறுதி செய்ய, எங்களது நிபுணர் குழு ரியூனியன் தீவு விரைந்துள்ளது என்று கூறியுள்ளார்.