ரஜினி பட வாய்ப்பை தட்டிக்கழித்த பிரபல இயக்குனர்

ரஜினி பட வாய்ப்பை தட்டிக்கழித்த பிரபல இயக்குனர்

alphonse‘நேரம்’ பட நாயகன் நிவின்பாலி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள இந்த படத்தின் பட்ஜெட் வெறும் ரூ.4 கோடிதான். ஆனால் பாக்ஸ் ஆபீஸில் இந்த படம் ரூ.30 கோடி வரை வசூல் செய்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் சமீபத்தில் மரியாதை நிமித்தமாக சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தார். அப்போது ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா, அல்போன்ஸ் அவர்களிடம் தனது தந்தை ரஜினிக்காக ஒரு கதையை தயார் செய்யும்படி கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு அல்போன்ஸ் ‘நான் சின்ன பட்ஜெட்டில் படம் எடுப்பவன், ரஜினி சாரை இயக்கும் அளவிற்கு நான் வளரவில்லை’ எனக் கூறி மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏ.ஆர்.முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ் முதல் பல முன்னணி இயக்குனர்கள் ரஜினி படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்காதா? என காத்திருக்கையில் ஒரு இயக்குநர் அந்த வாய்ப்பை நிராகரித்தது சினிமா உலகினரிடையே அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

Leave a Reply