பல் சொத்தை? பல்வலியா? கவலையே வேண்டாம்..!

பல்-350x250

இன்றைய நவீன பற்பசை மற்றும் பற்பொடிகளில் சுவைக்காக அதிகமாக இரசாயனத்தை கலப்பதால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி மிகவும் மோசமான நோய்களுக்கு நாம் உள்ளாகலாம். இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு பற்பசைகளில் நிகோக்டின் அளவு அதிகமாக கலப்பதாக டெல்லியைச் சசேர்ந்த ஒரு தொண்டு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது(

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்று நம் முன்னோர்கள் ஆலம் விழுது மற்றும் வெப்பம் குச்சியை பல்துலக்க பயன்படுத்தினர்.

 இன்று கிராமத்த்தில் இருப்பவர்கள் இந்த “பிராண்டு பேஸ்ட்தான்” என் குழந்தைக்குப் பிடிக்கும் என்று சொல்வதில் பெருமைகொல்வதும், வேப்பங்குச்சியை தரக்குறைவாகப் பார்ப்பதும் இருக்கிறது. கிராமத்தில் உள்ளவர்கள், கிராமத்திற்கு செல்லும் வாய்ப்புள்ளவர்கள் இதன் அறிவியல் உண்மை புரிந்து வேப்பங்குச்சி, ஆலம் விழுது போன்றவற்றை ஒரு மாதத்திற்கு தேவையான அளவு கொண்டுவந்து வைத்து பயன்படுத்தலாம். தீர்ந்து போனால், மீண்டும் வரவழைக்கலாம். காலையில் பல் துலக்குவதைவிட இரவில் பல் துலக்குவது மிகவும் அவசியம்.

பல்லை பாதுகாக்க இரவும், பகலும் இரண்டு முறை பல்துலக்குவதும், நாமும் பின்பற்றி நம் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்துவதும் மிகவும் அவசியம். பல்லை சுத்தம் செய்யும்போது நாக்கை சுத்தம் செய்யவேண்டும். அதில்தான் அதிகம் கிருமிகள் படிந்து பரவுவதாக ஆராய்ச்சிகள் கூருகின்றன. நம் முன்னோர்கள் நமக்காக மிக சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து பல அறிய மருந்துகளை அளித்து சென்றுள்ளனர். அந்த வகையில் பற்களை பாதுகாக்க சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து ஒரு தரமான பற்பொடியை எப்படி நம் வீட்டிலேயே தயாரிப்பது என்று பார்போம்.

வீட்டிலேயே பற்பசை தயாரிக்கலாம்

கடுக்காய் பொடி 100 கிராம் – நாட்டு மருந்து கடைகளில் பவுடராக வாங்கி கொள்ளவும்

கிராம்பு 50 கிராம்

கல் உப்பு 25 கிராம்

இந்த கலைவையை அளவில் கூறவேண்டுமானால் ஒரு பங்கு கடுக்காய் அரை பங்கு கிராம்பு மற்றும் கால் பங்கு கல் உப்பு.

மேற்சொன்ன பொருட்களில் கிராம்பு மற்றும் உப்பை நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொண்டு அதில் கடுக்காய் பவுடரையும் கலந்து கொள்ளவும். இப்பொழுது உங்களுக்கான தரமான பற்பொடி தயாராகிவிட்டது. பல் சொத்தை உள்ளவர்கள் இதை பற்பொடியாக தினந்தோறும் பயன்படுத்தினால் பல் சொத்தை இருப்பதையே மறந்துவிடுவார்கள்

Leave a Reply