பாகிஸ்தானில் நடந்த 10ஆம் வகுப்பு தேர்வில் இந்திய மாணவி சாதனை

sikhபாகிஸ்தான் நாட்டில் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் இந்திய மாணவி ஒருவர் சாதனை செய்துள்ளார். சீக்கிய மதத்தை சேர்ந்த அந்த மாணவி 1,100-க்கு 1,035 மதிப்பெண்கள் பெற்று இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த ஒரே மாணவி  என்ற பெருமையை அடைந்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த சீக்கிய மதத்தைச் சேர்ந்த மாணவி மன்பீர் கவுர் 1,100-க்கு 1,035 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

1,100-க்கு 1,035 மதிப்பெண்கள் மதிப்பெற்ற மன்பீர் கவுர் தினமும் 12 மணி நேரம் படித்ததாக கவுரின் பெற்றோர் தெரிவித்தனர்.

இது குறித்து பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் கூறுகையில், “இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த ஒரே சீக்கிய மாணவி என்ற பெருமை மன்பீர் கவுருக்கு தற்போது கிடைத்துள்ளது. மன்பீர் கவுரின் சாதனை அவர் சார்ந்த சமூகத்தின் மற்ற மாணவ- மாணவிகளுக்கும் ஊக்கமாக அமையும். பஞ்சாப் மாகாணத்தில் உள்ள எந்தவொரு அரசு கல்வி நிறுவனத்திலும் அவர் கல்வி பயிலாம்” என்றார்.

Leave a Reply