ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு. கலாநிதி மாறன், தயாநிதி மாறன் நீதிமன்றத்தில் ஆஜர்

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு. கலாநிதி மாறன், தயாநிதி மாறன் நீதிமன்றத்தில் ஆஜர்

dayanidhi-maranஏர்செல் – மேக்சிஸ் தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும் சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறன் ஆகிய இருவருக்கும் எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று புதுடில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளதால், இன்று நடைபெறும்  விசாரணையில் மாறன் சகோதரகள் ஆஜராகினர். மேலும்  சன்குழுமம் சார்பில் சாமிநாதனும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன் கடந்த மார்ச் 16-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. மேலும், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேஷியாவைச்  மேக்சிஸ் தலைவர் டி. அனந்தகிருஷ்ணன், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், செüத் ஏசியா என்டர்டெயின்ட்மென்ட் ஹோல்டிங், அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆஜராகாததால், அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்குடன் தொடர்பில்லாத ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை டில்லி சிபிஐ நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை என்று கூறி மாறன் சகோதரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டிருந்தார். இந்த மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

Leave a Reply