தாவூத் இப்ராஹிம் தங்கை கேரக்டரில் ரஜினி நாயகி
பிரபல பாலிவுட் இயக்குனர் அபூர்வா லாக்கியா, மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு காரணமான முதல் குற்றவாளி தாவூத் இப்ராஹிமின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்றை எடுத்து வருகிறார்.
தாவூத் இப்ராஹிமுக்கு மொத்தம் 12 தங்கைகள். இவர்களில் மும்பையில் வாழ்ந்த ஹசீனா பார்கர் என்ற தங்கையின் மீது தாவூத் இப்ராஹிம் மிகுந்த வைத்திருந்ததாக கூறப்பட்டது. ஹசீனா கடந்த 2014ஆம் ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இவரது இறுதி சடங்கிற்கு தாவூத் இப்ராஹிம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹசீனா கேரக்டரில் நடிக்க பல பாலிவுட் நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு தற்போது சோனாக்ஷி சின்ஹா முடிவு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சோனாக்ஷி சின்ஹா தன்னுடைய டுவிட்டரில் கூறியிருப்பதாவது, “இந்த படம் ஒரு சிறப்பான திரைக்கதையுடன் அமைந்துள்ளது. என்னுடைய ரோல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் எப்போதுமே உண்மைச்சம்பவ கதைகளில் நடிக்க மிகவும் ஆசைப்படுவேன். இந்த கேரக்டரில் என்னால் முடிந்தவரை சிறப்பாக நடிப்பேன்’ என்று கூறியுள்ளார்.
சோனாக்ஷி சின்ஹா சமீபத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா’ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘அகிரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.