27 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட்: மக்களவை சபாநாயகர் அதிரடி நடவடிக்கை

27 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட்: மக்களவை சபாநாயகர் அதிரடி நடவடிக்கை

speakerநாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பமாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ஒருநாள் கூட சுமூகமாக நடைபெறவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் லலித் மோடி, வியாபம் ஊழல் குறித்த பிரச்சனை எழுப்பியுள்ளதால் நாடாளுமன்றமே முடங்கியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் 27 பேரை ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதிரடியாக நேற்று உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஐபிஎல் கிரிக்கெட் தலைவர் லலித் மோடிக்கு பாஸ்போர்ட் வழங்க உதவி செய்ததாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் முறைகேடு தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் சவுகான் ஆகியோர் பதவி விலக கோரி நாடாளுமன்ற இரு அவைகளையும் காங்கிரஸ் உறுப்பினர்கள் முடக்கி வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கையை நாள் முழுவதும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார். இதனிடையே, மக்களவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் 27 பேரை ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவையை நடத்தவிடாமல் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டதால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ள சபாநாயகர், பதாகையுடன் அமளியில் தொடர்ந்து ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply