ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது MH370 விமானத்தினுடையதே: மலேசிய அமைச்சர் உறுதி

ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது MH370 விமானத்தினுடையதே: மலேசிய அமைச்சர் உறுதி

mh370239 பயணிகளுடன் கடந்த 16 மாதங்களுக்கு முன்னர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங் நகருக்கு கிளம்பிய MH 370 என்ற விமானம் கிளம்பிய சிலமணி நேரங்களில் மாயமானது. இந்த விமானத்தின் மற்றும் அதில் பயணம் செய்தவர்களின் கதி என்ன ஆனது என்பது இதுவரை புரியாத மர்மமாக இருந்த நிலையில் சமீபத்தில் அந்த விமானத்தின் பாகங்கள் என்று சந்தேகிக்கப்படும் வகையில் சில உதிரிப்பாகங்கள் இந்திய பெருங்கடலில் உள்ள ரீயூனியன் தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாகங்கள் காணாமல் போன MH 370 பாகங்கள்தானா? என்பதை உறுதி செய்ய நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று ரீயூனியன் தீவுக்கு விரைந்தது.

இந்நிலையில் ரீயூனியன் தீவுகளில் கரையில் ஒதுங்கிய விமான பாகங்கள் MH 370 விமானத்துடையது என்பது தற்போது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் தியாங் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

“ரீ யூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட இறக்கை போயிங் 777 விமானத்தினுடையது என்பது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது. இந்த பாகம் பிரான்சில் சோதனை செய்யப்பட்டது. போயிங் விமான தயாரிப்பாளர்கள் மற்றும் மலேசிய ஏர்லைன்ஸ் சிவில் ஏவியேஷன் துறையினரும் இதனை உறுதி செய்தனர்” என்று கூறினார். மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் MH370 ராடாரிலிருந்து திடீரென மறைந்தது. அதனை தேடும் பணி 16 மாத காலங்களாக நீடித்து வந்தது. அவ்வப்போது சில பாகங்கள் கிடைத்தாலும் அது மாயமான விமானத்தின் பாகமாக கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமான இறக்கையைச் சோதித்த போது அது 239 பயணிகளுடன் கடலில் விழுந்த எம்.எச்.370 விமானத்தின் பாகமே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply