சிசேரியன் சிகிச்சையின் போது மறதியாக கத்தரிகோலை வயிற்றினுள் வைத்த ரஷ்ய டாக்டர்.

சிசேரியன் சிகிச்சையின் போது மறதியாக கத்தரிகோலை வயிற்றினுள் வைத்த ரஷ்ய டாக்டர்.
scissor
ஆபரேஷன் செய்யும்போது டாக்டர்கள் மறதியின் காரணமாக கத்திரிகோலை வயிற்றிலேயே வைத்து தைத்து விடுவார்கள் என்று பல ஜோக்குகளை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் ரஷ்யாவில் உண்மையிலேயே ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சையின்போது மறதியாக ஒரு பெண்ணின் வயிற்றில் கத்தரிகோலை வைத்து தைத்து விட்டார். அந்த கத்தரிக்கோல் மூன்று வருடங்கள் கழித்து தற்போது வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா நாட்டில் ஐசினா ஸிண்டுசோவா என்ற பெண் சிசேரியன் சிகிச்சைக்காக அந்நாட்டு மருத்துவமனை ஒன்றில் கடந்த 2012-ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். சிசேரியன் மூலம் குழந்தை பிறந்த பின்னர் அவ்வப்போது அவருக்கு வயிறு மற்றும் முதுகில் பயங்கர வலி ஏற்பட்டு வந்தது.

கடுமையான வலியால் தவித்து வந்த அவருக்கு உடல் எடையும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. இதனை அடுத்து அவர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அவருடைய வலிக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் வகையில் அவரது வயிற்றுப்பகுதியை எக்ஸ்-ரே செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில், சுமார் 8 அங்குலத்தில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்திரிக்கோல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து மூன்று ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட அந்த கத்தரிகோலை இரண்டரை மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

ஐசினா, வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து அறுவை சிகிச்சை செய்து தன்னை பெரும் அவதிக்குள்ளாக்கிய அந்நாட்டின் உஃபா நகர மருத்துவமனையின் மீது வழக்கு தொடுக்க உள்ளார்.

Leave a Reply