மும்பை அருகே அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 11 பேர் பலி

மும்பை அருகே அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 11 பேர் பலி

thane 1 thane 2 thane 3 thaneசென்னை அருகேயுள்ள போரூரில் கடந்த ஆண்டு 11 மாடியுள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழந்த அதிர்ச்சியே மக்கள் மனதில் இருந்து இன்னும் நீங்காத நிலையில் இன்று மும்பை அருமேயுள்ள தானே நகரில் 50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில்  11 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தானே நகராட்சி மண்டல பேரிடர் மேலாண்மை பிரிவு பொறுப்பாளர் சந்தோஷ் காதம் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “தானே நகரின் பி-கேபின் பகுதியில் இருக்கும் கிருஷ்ண நிவாஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் 4 தளங்கள் உள்ளன. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இக்கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்த 50 வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி உடனடியாக தொடங்கியது. 12-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிலர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கிடையில், அதிகாலையில் பெய்த கனமழையால் மீட்புப் பணியில் சிறிது நேரம் சுணக்கம் ஏற்பட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கின. மீட்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர். அஸ்வினி ஜோஷி மேற்பார்வையிட்டு வருகிறார்.

இந்த கட்டிடம் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை எனக் கூறி முனிசிபல் நிர்வாகம் பல முறை எச்சரிக்கை விடுத்திருந்தது” என்றார்.

Leave a Reply