ப்ரீசர் பெட்டிக்குள் 70 முதலைகளின் தலைகள். ஆஸ்திரேலிய வனவிலங்கு அதிகாரிகள் அதிர்ச்சி

ப்ரீசர் பெட்டிக்குள் 70 முதலைகளின் தலைகள். ஆஸ்திரேலிய வனவிலங்கு அதிகாரிகள் அதிர்ச்சி

crocodilesஆஸ்திரேலியா நாட்டில் உணவுப்பொருட்களை உறைய வைத்து பாதுகாக்க பயன்படுத்தும் ப்ரீசர் (freezer) பெட்டிக்குள் 70 முதலைகளின் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் நகரில் இருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ள ஹம்ட்டி டூ என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பகுதிக்கு சுற்றுலா வந்த இளைஞர்கள், அங்குள்ள சில கடைகளிலிருந்து சகிக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியதால் அங்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, அங்கிருந்த ஒரு மிகப்பெரிய ப்ரீசர் ஒன்றில் சுமார் 70 முதலைகளின் தலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ப்ரீசரைச் சுற்றி மொய்த்துக்கொண்டிருந்த புழுக்களை அகற்றி விட்டு 70 முதலைகளின் தலைகளையும் கைப்பற்றிய வன விலங்கு அதிகாரிகள் இது ஒரு மிகப்பெரிய கடத்தல் கும்பலின் செயலாக இருக்கும் என சந்தேகித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply