அஜீத் மட்டுமே அடுத்த ரஜினி. வட இந்திய பத்திரிகை பாராட்டு
விஜய் நடித்த ‘புலி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, புரமோஷன் நிகழ்ச்சிகள் ஆகியவை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அஜீத் சினிமாவிற்குள் நுழைந்து 23 வருடங்கள் ஆனதை ஒட்டி அவரது ரசிகர்கள் ஒரு விழா போன்று டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். டுவிட்டர் இணையதளம் கிட்டத்தட்ட அஜீத் ரசிகர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அஜீத்தின் 23 வருடங்கள் குறித்த ஹேஷ்டேக் வழக்கம்போல இந்திய அளவில் டிரெண்டில் இருந்து வந்தது.
இந்நிலையில் அஜீத்தின் 23 வருட சினிமா வாழ்க்கை குறித்து வட இந்திய பத்திரிகை ஒன்றில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘தல’ என்று அன்புடன் அவரது ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் அஜீத், அடுத்த ரஜினி ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டார் என்றும் அவர் தற்போது புகழின் உச்சியில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என ஒரு வாரப்பத்திரிக்கையும், விஜய் ரசிகர்களும் அழைத்து வரும் நிலையில் வட இந்திய பத்திரிகை ஒன்று “அடுத்த ரஜினி அஜீத் தான்” என்று குறிப்பிட்டுள்ளதால் அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மீண்டும் அடுத்ஹ்ட சூப்பர் ஸ்டார் யார்? என்ற பிரச்சனை அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களிடையே தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.