10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசி. அணி அபார வெற்றி. சொந்த நாட்டில் ஜிம்பாவே பரிதாபம்.
ஜிம்பாவே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி நேற்று ஹராரேநகரில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற ஜிம்பாவே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் அபார பந்து வீச்சு காரணமாக ஒரு கட்டத்தில் 68 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தவித்து கொண்டிருந்த நிலையில் சிக்கந்தர் ராஸாவின் அபார சதம் காரணமாக ஜிம்பாவே 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது.
இதனால் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி எவ்வித பதட்டமின்றி விக்கெட் இழப்பின்றி 236 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களான குப்தில் 116 ரன்களும் லதாம் 110 ரன்களும் எடுத்தனர். குப்தில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.