857 ஆபாச இணையதளத்திற்கு விதிக்கப்பட்ட தடை திடீர் நீக்கம்.
இந்தியாவில் ஆபாச இணையதளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்த புகார்கள் அதிகம் எழுப்பப்பட்டதால் இந்த விஷயத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்த மத்திய அரசு நேற்று முன் தினம் 857 ஆபாச இணையதளங்களுக்கு தடை விதித்தது.
ஆனால் அரசு எதிர்பார்த்ததற்கு மாறாக இந்த தடைக்கு பல்வேறு வகையில் எதிர்ப்பு கிளம்பியது. தனிமனித சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து தற்போது 857 ஆபாச இணையதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு திடீரென நீக்கியுள்ளது. எனினும் குழந்தைகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாச பட வலைதளங்களுக்கு மட்டும் தடை நீடிப்பதாக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஆபாச இணையதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவகாரம் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்க மளிக்கப்பட்டுள்ளது.