திரைப்படம் ஆகிறது ஐ.பி.எல் சூதாட்டம். ஹீரோவாக நடிக்கின்றார் ஸ்ரீசாந்த்
சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான வழக்கில் இருந்து விடுதலையான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், தற்போது திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் இந்த படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தயாரிக்கப்படுகிறது.
புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சனா யாடிரெட்டி இயக்கும் இந்தப்படம், ஐ.பி.எல். மற்றும் கிரிக்கெட் வீரரைப் பற்றிய கதைக்கருவை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஸ்ரீசாந்த், அவருடைய கேரக்டரிலேயே நடிப்பதாக கூறப்படுகிறது.
ஸ்ரீசாந்த் நடிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும், இன்னும் 6 மாதத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டிருப்பதாக யாடி ரெட்டி இன்று தெரிவித்தார். இப்படம் 14 இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
தென்னிந்தியாவில் தனக்கு இது முதல் படம் என்று கூறிய ஸ்ரீசாந்த், இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிப்புத்துறையில் நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருப்பதாக கூறுகிறார்.