புகையினால் சமுதாயத்திற்கு கேடு இல்லை. வைகோ கொடுத்த சர்டிபிகேட்டால் பொதுமக்கள் அதிர்ச்சி

புகையினால் சமுதாயத்திற்கு கேடு இல்லை. வைகோ கொடுத்த சர்டிபிகேட்டால் பொதுமக்கள் அதிர்ச்சி

vaikoமதுவுக்கு எதிராக வரிந்து கட்டி கொண்டு மாணவர்களையும் போராட தூண்டிவிடும் வைகோ, புகைபிடிப்பதால் பெரிதாக தீங்கு இல்லை என்று கூறியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர் உண்மையாகவே மக்களின் நலன் கருதித்தான் மதுவிலக்கு போராட்டம் நடத்துகின்றாரா? அல்லது மற்ற கட்சி தலைவர்களை போல ஓட்டுக்காக போராட்டம் நடத்துகின்றாரா? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

புகை பிடிப்பது குறித்து வைகோ கூறியுள்ளது இதுதான்: புகை அருந்துவது உடல் நலத்திற்கு கேடு. ஆனா, புகை பிடிச்சவன் பலாத்காரம் செய்கிறதில்லை. புகை பிடிச்சதுனால போய் பெண்கள் கையை பிடித்து இழுக்கிறதில்லை. புகை பிடிச்சதுனால ஒருவனைப் போய் கை, காலை வெட்டுறதில்லை. புகை பிடிச்சதுனால பெத்த தாயை பலாத்காரம் செய்யப்போவதில்லை. புகை பிடிச்சதுனால சமுதாயத்தை அடியோடு நாசமாக்குறதில்லை. இதுதான் உண்மை நிலைமை’ என்று வைகோ கூறியுள்ளதை நடுநிலையாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா?

இவர் சொல்வது போல் மதுகுடிப்பவர்கள் அனைவரும் மற்றவர்களின் கைகாலை வெட்டியிருந்தால் இந்நேரம் தமிழகத்தில் ஒருவருக்கு கூட கைகால்கள் இருந்திருக்காது. ‘புகை பிடிப்பதால் ரத்த புற்று நோய் வரும்’, ‘புகைப்பது நீங்கள், புகைவது நாங்களா?’, ‘புகைப்பவர்களைவிட, அருகில் இருப்பவர்களுக்கே அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது’ புகை நமக்கு பகை’ என பல்வேறு விழிப்புணர்ச்சியை மக்கள் மத்திய சமூக நல அமைப்புகள் ஏற்படுத்தி வரும் நிலையில் வைகோ இதுபோன்று பேசி இருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வைகோவின் இந்தபேச்சுக்கு காரணம் இல்லாமல் இல்லை. வைகோவின் மகன் துரை வையாபுரி, ஒரு பிரபல சிகரெட் நிறுவனத்தின் சிகரெட்டுக்கு டிஸ்ட்ரிபியூட்டராக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தியை மறைக்கத்தான் இவ்வாறு பேசுகின்றாரா? என்ற சந்தேகம் தற்போது வலுத்துள்ளது. வைகோ அவர்களுக்கு ஆட்சியை பிடிக்க்கும் அளவுக்கு செல்வாக்கு இல்லை என்றாலும் மக்கள் மனதில் அவர் ஒரு தன்னலம் கருதாத, அப்பழுக்கற்ற தலைவர் என்ற நல்ல பெயர் இருந்தது. ஆனால் அந்த நல்ல பெயரை அவரே தற்போது தனது பேச்சினால் கெடுத்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply