கேட்ஜெட் கார்னர்

gadjet_2493396f

ஜியோமி எம்ஐ 4 விலை குறைந்தது

ஜியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட் ஃபோனான எம்ஐ4-ஐ ரூ. 23,999 என்னும் விலைக்கு விற்றுவந்தது. ஜியோமி இந்தியா நிறுவனம் ஓர் ஆண்டைக் கொண்டாடுவதை முன்னிட்டு ஒரு நாளைக்கு மட்டும் இதன் விலையை 17,999 ஆகக் குறைத்து விற்றது. இதற்கு வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் பலர் சலுகையை நீடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஜியோமி நிறுவனம் எம்ஐ4 ஸ்மார்ட் போனை எப்போதுமே அதே குறைந்த விலையில் விற்க முடிவுசெய்திருக்கிறது. எனவே இதன் விலை இனி ரூ.17,999 தான்.

இதன் அம்சங்கள்: திரை: 5 அங்குல எச்.டி.

ராம்: 3 ஜிபி இயங்குதளம்: ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4

ரியர் கேமரா: 13 எம்பி

ஃப்ரண்ட் கேமரா: 8 எம்பி

கனெக்ட்விடி: வை ஃபை, ப்ளுடூத்

எடை: 149 கிராம்

ஆப்பிள் வாட்ச் வாங்கப் போறீங்களா?

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வாங்கும் ஆசை உங்களுக்கு இருக்குதா? இதுவரை இந்த ஆப்பிள் வாட்ச் ஆன்லைனிலும் ஆப்பிள் ஸ்டோரிலும் விலை உயர்ந்த பொருள்களை விற்கும் ஆடம்பரமான ஸ்டோர்களில் மட்டுமே கிடைத்துவந்தது. வரும் ஆகஸ்ட் ஏழு முதல் ஆப்பிள் வாட்ச் அமெரிக்காவின் முன்னணி விற்பனை நிறுவனமான பெஸ்ட் பை ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்று அந்த இணையதளம் தெரிவிக்கிறது. பெஸ்ட் பை இணையதளத்திலும் ஆப்பிள் வாட்ச் கிடைக்கும். இந்த ஆண்டின் பெருமைக்குரிய பொருளான ஆப்பிள் வாட்சை விற்பதில் பெஸ்ட் பை நிறுவனம் அதிக உற்சாகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. மொத்தம் 16 ஆப்பிள் வாட்ச் மாடல்கள் இங்கே கிடைக்கும்.

ஏ.சி. சோபா வரப்போகுது

அடிக்கிற வெயிலில் சோபாவில் உட்கார்ந்தாலே அனல் பறக்குது என அலுத்துக்குறீங்களா? இனி அந்தக் கவலை இல்லை. குஜராத்தின் காந்தி நகரைச் சேர்ந்த ஏ.சி. ரிப்பேர்காரர் தஷ்ரத் படேல். இவர் குளுகுளு சோபாவை வடிவமைத்துள்ளார். இது வீட்டில் உள்ள ஸ்பிளிட் ஏசியைப் போல் செயல்படும். வெப்பநிலையைக் கூட்டலாம், குறைக்கலாம், வெறும் ஃபேன் மட்டும் போதுமென்றாலும் அதைப் போட்டுக்கொள்ளலாம். இவருடைய முயற்சிக்கு சிறுதொழில் நிறுவன அமைச்சகமும், தேசிய வடிவமைப்பு நிறுவனமும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளன. இதன் விலை ஒரு லட்சத்திலிருந்து ஒன்னேகால் லட்சமாக இருக்குமாம்.

லாவா பிக்ஸெல் 1 ஆண்ட்ராய்டு போன்

லாவா நிறுவனம் கூகுளுடன் இணைந்து தயாரித்திருக்கும் முதல் ஆண்ட்ராய்டு ஃபோனை வெளியிட்டுள்ளது. லாவா பிக்ஸெல் 1 என்னும் அந்த ஆண்ட்ராய்டு போனின் விலை ரூ. 11,350. பிளிப்கார்டிலும் பிற ஸ்டோர்களிலும் இது கிடைக்கும். இரட்டை சிம் வசதி கொண்டது, 32 ஜிபி சேமிப்புத் திறன் கொண்டது. கூகுள் போன்களைப் போலவே, இதிலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களைச் செய்துகொள்ளலாம். இது பொன்னிறத்திலும், ஒயிட் சில்வர் நிறத்திலும் கிடைக்கிறது.

இதன் அம்சங்கள்:

திரை: 5.5 அங்குல எச்.டி.

ராம்: 2 ஜிபி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 5.1.1

ரியர் கேமரா: 13 எம்.பி.

ஃப்ரண்ட் கேமரா: 8 எம்.பி.

கனெக்ட்விடி: 3ஜி, வை ஃபை, ப்ளுடூத்

Leave a Reply