தடையை மீறி போராட்டம் நடத்திய விஜயகாந்த் கைதாகி விடுதலை

தடையை மீறி போராட்டம் நடத்திய விஜயகாந்த் கைதாகி விடுதலை

vijayakanthதமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, தடையை மீறி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டு, பின்னர் சிலமணி நேரங்களில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி, சென்னையில் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த போலீஸார் தடை விதித்திருந்தபோதிலும், தடையை மீறி கோயம்பேட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த காவல்துறையினர், அனுமதியின்றி  போராட்டத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் உள்பட தேமுதிக கட்சியினர் பலரை கைது செய்தனர். இதேபோல் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் எல்.கே.சுதீஷ் உள்பட தேமுதிக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிகவினர் நெற்குன்றத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இரவு சுமார் 8.15 மணியளவில், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்பட தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்ட 6,900 தே.மு.தி.க.வினர் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

[carousel ids=”69451,69449,69448,69447,69446,69445,69443,69444,69442″]

Leave a Reply