போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டாம். வாட்ஸ் மூலம் புகார் கொடுக்கலாம். பெங்களூரில் புதிய வசதி

போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டாம். வாட்ஸ் மூலம் புகார் கொடுக்கலாம்.

whatsappதற்போதைய இளைஞர்களிடம் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு இணையாக வாட்ஸ் அப் புகழ்பெற்று விளங்குகிறது. இந்நிலையில்  ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றை தொடர்ந்து, ‘வாட்ஸ் ஆப்’ மூலம் புகார் அளிக்கும் வசதியை பெங்களூரு காவல் துறை அறிமுகம் செய்துள்ளதால் பெங்களூர்வாசிகள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

குற்றச்செயல்களால் பாதிக்கப்படுபவர்களில் பலர் காவல் துறையில் புகார் அளிக்க தயங்கும் நிலை சில சமயங்களில் ஏற்படுகிறது. இதனால் இ-மெயில், ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக இணையதளங்கள் மூலம் புகார் அளிக்கும் வசதியை பெங்களூரு மாநகர காவல் துறைதான் இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகம் செய்து சாதனை படைத்தது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது ‘வாட்ஸ் ஆப்’ மூலமாக புகார் அளிக்கும் வசதியை பெங்களூரு காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு ஊர்க்காவல் படை டி.ஜி.பி. எம்.என்.ரெட்டி கூறும்போது,” உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், மாணவர்கள், தொழிலதிபர்கள் பெங்களூரு வந்து செல்கின்றனர். நகரில் நடைபெறும் குற்றச்செயல்களில் பாதிக்கப்படுவோர், காவல் நிலையத்துக்கு வரத் தயங்குகின்றனர். எனவே நவீன தலைமுறையின் வசதிக்காக ‘வாட்ஸ் ஆப்’ மூலம் புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களோ, சம்பவ‌த்தை நேரில் பார்த்தவர்களோ 9480801000 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்”என்று கூறினார்.

Leave a Reply