சித்தர்களின் அறிவியலில் பஞ்சாட்சரம் இருவகைப்படும்
1. தூல பஞ்சாட்சரம்
2. சூக்கும பஞ்சாட்சரம்.
இதில் தூல பஞ்சாட்சரம் என்பது நமசிவய, சூக்கு பஞ்சாட்சரம் என்பது சிவயநம. திருமூலர் இதனை. எளியவாது செய்வாரெங்கள் ஈசனை ஒளியையுண்ணி யுருகு மனத்தாராய்த் தெளியவோதி சிவாய நம வென்னும் குளிகையிட்டுப் பொன்னாக்குவன் கூட்டையே. திருமந் – 2709.
தமிழ் ஞான மூதாட்டியாகிய ஓளவையும் சிவயநம என்றிருப் போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்கிறார்.இறைவன் ஒளிமயமானவன் சோதிமய மானவன் என்பதை அறிந்து அதிலே தனது கரணங்களை ஒடுக்கி தூல விகிதத்தை சூக்கும விகிதமாக மாற்றி தூல உடம்பை ஒளி உடம்பாக மாற்றி இறைவனோடு இரண்டற கலப்பதேயாகும்.
சிவாக்கியார் சூக்கு பஞ்சாட்சர மகிமையை பின்வருமாரு கூறுகிறார்.
சிவயவசி என்னவும் செவிக்க இச்சகமெலாம்
சிவயவசி என்னவும் செவிக்க யாவும்
சித்தியாம் சிவயவசி என்னவும் செவிக்க வானமாளலாம்
சிவயவசி என்பதே இருதலை தீ ஆகுமே!
இதை தக்க குருமூலம் உபதேசக்கலையால் கடவுள் நிலையறிந்து அம்மய மாதலாகும். இது பிரம்ம ரகசியம் சிவரகசியம் என வேத ஆகமங்கள் கூறும் மெய் நெறியாகும். இது எந்நாட்டவரும் எம்மதத்தினரும் எச்சமயத்தவரும் உணர்ந்து சமரசம் பெறும் மெய்நெறியாகும். இதுவே சித்தர்களின் நெறியாகும்.