அரைமணி நேரம் பின்னோக்கி செல்கிறது வட கொரியா. அதிபர் கிம் ஜா விநோத அறிவிப்பு

அரைமணி நேரம் பின்னோக்கி செல்கிறது வட கொரியா. அதிபர் கிம் ஜா விநோத அறிவிப்பு

north koreaஜப்பான், வடகொரியா, தென்கொரியா  ஆகிய  மூன்று நாடுகளுக்கும் ஒரே நேர அளவு இதுவரை இருந்து வந்தது. ஆனால் ஜப்பானின் நேரத்தை பின்பற்ற விரும்பாத வடகொரியா தனது நாட்டின் நேர அளவை அரை மணி நேரம் குறைத்துள்ளது. இதனால் வடகொரியா, ஜப்பானை விட அரைமணி நேரம் பின்னோக்கி செல்கிறது.

1912ஆம் ஆண்டு முதல் வடகொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் ஜப்பானின் நேரத்தை பின்பற்றி வருகின்றன. ஆனால் வட கொரியாவில் சமீபத்தில் அதிபராக பதவியேற்ற கிம் ஜாங் உன் பல வினோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இதுவரை இருந்த ஜப்பான் நேர அளவில் நீட்டிக்க விரும்பாமல் வரும் 15ஆம் தேதி முதல் அரை மணி நேரத்தை குறைக்க உத்தரவிட்டுள்ளார்.

ஜப்பான் ஏகாதிபத்தியத்தை ஒழிக்கும் வகையாக வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல், தற்போது இருக்கும் நேரத்திலிருந்து அரை மணி நேரம் குறைக்கும் வகையில் பின்னோக்கி மாற்றி அமைக்க அதிபர் உத்தரவிட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.  இந்த புதிய நேர அளவு பியோங்யாங்(GMT +8.30 ) என்ற பெயரில் அழைக்கப்படும். ஆனால் தென் கொரியா தொடர்ந்து ஜப்பான் நேரத்தையே பின்பற்ற போவதாக அறிவித்துள்ளது

Leave a Reply