ஹெர்னியா, குடலிறக்கம், அண்டவாதம், இரணியா இந்த அனைத்தும் குறிப்பிடுபவை ஒன்றையே. ஹெர்னியா குறித்த விவரங்களை இனி பார்ப்போம்:-
ஹெர்னியா என்றால் என்ன? வயிற்றின் தசைகளில் சில வலுவற்ற புள்ளிகளில் வயிற்றுப் பாகங்கள் (குடல் உள்பட) வெளித் தள்ளப்படுவதே ஹெர்னியாவாகும். பார்ப்பதற்கு வீக்கம் அல்லது கட்டி போல் வயிற்றுப் பகுதியில் இருப்பதால் நம்மில் பலர் ஒரு வித பயம் கலந்த தயக்கத்தால், பிறரிடமோ, மருத்துவரிடமோ உடனே அதைப் பகிர்ந்து கொள்வதில்லை.
ஹெர்னியாவுக்கு எத்தகைய சிகிச்சை முறை? கோவை எல்.சி. ஹெர்னியா கிளினிக்கில் அனைத்து வித ஹெர்னியா சிகிச்சைகளும் லாப்ராஸ்கோப்பி முறையில் செய்யப்படுகின்றன. திறந்த நிலை அறுவைச் சிகிச்சை (“ஓபன் சர்ஜரி’) மூலம் சரி செய்யப்பட்ட இடத்தின் தழும்பில் மீண்டும் வரும் ஹெர்னியாக்களும் எல்.சி. ஹெர்னியா மருத்துவமனையின் அதிநவீன தொழில்நுட்பத்தால் லாப்ராஸ்கோப்பி மூலமே சரி செய்யப்படுகின்றன. ஹெர்னியா வலை சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளி, அடுத்த நாள் முதலே தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியும்.
ஹெர்னியாவுக்கு ஒரே நாளில் தீர்வு: கோவையைச் சேர்ந்த தம்பு, ஒரு தொழில்கூடத்தின் உரிமையாளர். அவர் கடந்த 1995-ஆம் ஆண்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த வாகனம் விபத்து ஏற்பட்டது.
மோதியதில் வாகனத்தின் கைப்பிடி வயிற்றில் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். காயத்தின் வழியாக வயிற்றின் உள் உறுப்புகள் வெளியே தெரியும் விதமாக மிக மோசமான விபத்தாக அது இருந்தது.
அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஒரு பெரிய அவசர அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு அறுவைச் சிகிச்சை செய்த இடத்தில் வயிற்றில் ஒரு பெரிய வீக்கம் தென்படத் தொடங்கியது. அதன் அளவு நாளடைவில் மிகப் பெரியதாக மாறியது. அது தழும்புகளில் ஏற்படும் குடலிறக்கம் என்று கண்டறியப்பட்டது.
ஏறக்குறைய 19 ஆண்டுகள் தம்பு அந்த பெரிய குடலிறக்கத்துடன் மிகவும் அசெளகரியத்துடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் 2014-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குடலிறக்கத்தின் ஒரு பகுதியில் அடைப்பு ஏற்பட்டு தாங்க முடியாத வலியால் மீண்டும் அவதிப்பட்ட தம்பு, அருகில் உள்ள மருத்துவமனையில் தாற்காலிக சிகிச்சை மேற்கொண்ட பிறகு, கோவை எல்.சி. மருத்துவமனைக்கு வந்தார்.
பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு அதிநவீன லாப்ராஸ்கோப்பி குடலிறக்க அறுவைச் சிகிச்சை மூலம் சிதைந்த பகுதியில் வலை பொருத்தப்பட்டது. இதையடுத்து 2 நாள்களில் குணமடைந்த நிலையில் வீடு திரும்பினார். தற்போது குடலிறக்கத்தின் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் வாழ்க்கையை புது நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயாராகி விட்டார்.
ஆரம்ப நிலையிலேயே…: ஹெர்னியா பிரச்னைக்கு சிகிச்சை செய்து கொள்ள தாமதம் செய்யும் நிலையில், குடல் அடைப்பு, குடல் அழுகுதல் போன்ற விபரீத விளைவுகளுடன் பண விரயம், மன உளைச்சலும் ஏற்படும். எனவே ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.