ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் பாதுகாப்புக்கு ரூ.6.9 கோடி?

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் பாதுகாப்புக்கு ரூ.6.9 கோடி?

apple ceoஐபோன் தயாரிப்பில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக செயல்பட்டு கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம், உலகின் நம்பர் ஒன் லாபகரமான தொழில் நுட்ப நிறுவனமான செயல்பட்டு கொண்டிருக்கின்றது. உலகம் முழுவதும் பல கிளைகளை கொண்ட இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் அவர்களின் பாதுகாப்புக்கு அந்த நிறுவனம் வருடத்திற்கு ரூ.6.9 கோடி செலவு செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுபற்றி அந்த ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறுகையில் “நிறுவனத்தின் பங்குதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு டிம் குக் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும் சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

தங்கள் தலைமை நிர்வாக அதிகாரியின் பாதுகாப்புக்கு தொழில்நுட்ப நிறுனங்கள் அதிகளவு செலவிடுவது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் இல்லை. இதற்கு முன்பு அமேசான், ஆரக்கிள் போன்ற நிறுவனங்கள் தங்கள் தலைமை நிர்வாகிகளின் பாதுகாப்புக்கு 1.5 மில்லியன் டாலருக்கு மேல் செலவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply