விஜய்யின் மெச்சூரிட்டியை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். ராதிகா
கடந்த 1987ஆம் ஆண்டு வருடம் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘நீதிக்கு தண்டனை. கலைஞர் மு.கருணாநிதியின் கதையில் உருவான இந்த படத்தில் ராதிகா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் அந்த காலத்திலேயே பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகியது. இந்த படத்தில்தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் உதவி இயக்குனராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 28 வருடங்கள் கழித்து எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனும் இளையதளபதியுமான விஜய் படத்தில் ராதிகா தற்போது ‘விஜய் 59’ படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்து வருகிறார். விஜய்யை சிறுவயதில் இருந்தே பார்த்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் ராதிகா என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் விஜய் 59″ படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய ராதிகா, ‘விஜய்யை எனக்கு சின்ன குழந்தையில் இருந்தே தெரியும். அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நான் நடித்த காலத்திலேயே விஜய்யை நான் நன்கு கவனித்து வந்துள்ளேன். அப்போது இருந்த அதே அடக்கம், பணிவு இப்போதும் அப்படியே இருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். ஆனால் அதே நேரத்தில் அவருடைய நடிப்பில் ஏற்பட்டுள்ள மெச்சூரிட்டியை பார்த்து ஆச்சரியப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்